இதுவும்..
நிச்சயமில்லாத
வாழ்க்கையின்
நிதர்சனங்களை
தேடி அலைந்து
கொண்டிருக்கிறேன் ...
மரத்த மனதோடும் ...
வறண்ட வார்த்தைகளோடும்.
வினா
என்
காயத்திற்கும்
சிரிப்புக்கும்
இடைவெளி
அதிகமில்லை ...
வினா..
தொடுவது
உன் நாவா...
வார்த்தையா
என்பதுதான் !!!
முற்றுகை
முடிவில்லாமலேயே
இன்னுமோர் முற்றுகை
துவங்கி இருக்கிறது...
எனக்கான முற்றுகையில்
நீயும்.....
உனக்கான முற்றுகையில்
நானும்...