கனா என் பின்னிரவிலும்
விழி மூட இயலாமல்
உறங்க முயற்சிக்கின்றேன்..
முயற்சி முற்று பெற்றது
முன்காலை
உன் முகம் தோய்ந்த கனவோடு..!!
முரண் தேம்பி அழும் என் காதல்
தேற்றுவாரின்றி
தேடி கொண்டிருந்தது
தேறுதல் வார்த்தைகளை ...
அவளிடம் ..!!
விஷம்
வார்த்தைகளின் விஷத்தை
உணர்ந்ததுண்டா ..!
அவள் வார்த்தைகளை நோக்குகையில்
தெரியும் , கொடும் தேளின்
கடும் விஷம் ஊடே செல்வது ....
காதல்
காதலா... ! என்று வினவ
முயற்சிக்கும் கணமே
ரத்தமும் சதையுமான ஓர்
வெளியை காட்டி விடுகிறாய்
பிறகெங்கே வினவ !.
காதல்
ஆயுதமேந்தி நின்ற
உன் நட்பிடம்
நிராயுதபாணியாய் நிற்கின்றது
என் காதல்
கொலைகளத்தில் களிரிடரும்
நிரபராதியைபோல் ....!
தவிப்பு உன் விழி இரண்டையும்
சந்தித்தபோது
உணர்விழந்தது
உடலும் மனமும் மட்டுமல்ல
என் உயிரும் கூடத்தான்...
மீட்டுக்க முடியாத
நினைவுகளையும் உணர்வுகளையும்
மீட்டு மீட்டி சென்றது
உன் அந்த பார்வைதான்
பாவையின் பார்வைக்கு
விலங்கிட முயற்சித்தேன்
என் விலங்கில் நானே மாட்டிக்கொண்டேன்.