நிழல்
இரவுகளில் இமை ஆகின்றாய்
பகல்களில் விழி ஆகின்றாய்
காலையில் தயங்குகிறாய்
மாலையில் மயங்குகிறாய்
முன்னே செல்லத்தான்
நினைக்கிறன்..
ஆனால் நிழலாய்
பின் தொடர்கிறேன் உனை!!!
தவிப்பு
இன்னும் மீளவே இல்லை
உனது கண்களில்
நிலைத்த என் பார்வை ..
இன்னும் மாறவே இல்லை
எனது தோள்களில்
நீ சாய்ந்திருந்த
நிமிடங்கள் ...
தவித்து கொண்டிருக்கிறேன்
உனை விடுதியில்
விட்டு வந்து !!!
வரம்
உன்னை காதலிக்கிறேன் என்று
வரமளித்து
உடனே உன்னை பிரியும்
சாபம் அளித்து விட்டாயே ...
தவமாக காத்திருக்கிறேன்
உன் முகம் காணும்
வரம் பெற !!!
பாரம்
உன் நினைவு அழுத்தும்போது
எல்லாம்
மார்போடு அழுந்த
அணைத்தபடி
குறுகி படுத்து கொள்கிறேன்,
நீ உடுத்தி போட்டு சென்ற
உன் வாசம் நிறைந்திருக்கும்
உன் இரவு உடுப்பை!!!
உயிர்
உன் விழி ஆகிறேன்
நீ பார்க்கும் போது...
உன் இமையாகிறேன்
நீ உறங்கும் போது ...
உன் கண்நீராகிறேன்
நீ துயருறும் போது ...
உன் சிரிப்பாகிறேன்
நீ மகிழ்வுறும் போது ...
உன்னுயிராகிறேன்
நீ என்னுயிராகும்போது !!!
உடை
என் குட்டி தேவதைக்கான உடைகளை
என் உயிர் நூல் கொண்டு நெய்ய
ஆரம்பித்திருக்கிறேன்,
காத்திருக்கிறேன் ..
சிறகு விரித்து
என்னுடை அணிந்து
அவள் எட்ட போகும் உயரங்களுக்காக.
துடிப்பு என் இதயம் துடித்து
கொண்டிருக்கிறது
உன் வருகைக்காக...
என் நாட்களை உனக்களித்து
உன் ஆயுள் நீள
வேண்டுகிறேன்,
நீ இழந்த அனைத்தையும்
மீண்டும் பெற!!
நினைவு பரிசுநீ விட்டு செல்லும்
நினைவுகளுக்கு
என் பரிசென்ன தெரியுமா.. !?
என் வாழ்க்கை..
நீ விரும்பினும் விரும்பாவிடினும்
உன் நிழல் நான்..
ஒளியில் உன் பின்தொடர்ந்து
இருளில் உன்னுள்ளே உறைவேன் .