காதல்காதலின் பெருவெளியில் அன்பு பூக்களை தூவி வைத்து காத்து கொண்டிருக்கிறேன்உன் வருகைக்காக......விழி மூடாமல் இமைக்க மறந்து .....இரக்கபட்டு வந்து விடாதே .!!!காதலுடன் வா .!!!
உளறல்பைத்தியகாரனின் பிதற்றல் எனவும் பிச்சைக்காரனின் யாசகம் எனவும் உனக்கு தோன்றலாம்...என் பிதற்றலும் யாசகமும் உனக்க்காகதானே......
நீயழகுமோகனமாகவும் இருக்கிறாய் முராரியாகவும் இருக்கிறாய் மோகமாகவும் இருக்கிறாய் முள்ளாகவும் இருக்கிறாய்...புரிதல்களுக்கு அப்பாற்பட்ட பெண் நீயடி ...உனை புரிந்தவர்க்கு மட்டுமே நீயழகு !!!!
காத்திருப்புஎனக்கு தோன்றுமெனின் அடுத்த கணமே எடுத்து கொள்வேன் உனை .......விடுத்து காத்திருக்கிறேன் ...நால்வரின் பகை தீர்த்து நீ வரும் வரை .
வேட்கை என்னிடமிருந்து வருபவை வெறும் வார்த்தைகள் அல்ல உனை கரை ஏற்றி விடமாட்டேனா என்ற வேட்கை ....வேட்கைக்கு வெள்வியாக்குகிறேன்என் வாழ்க்கையை...நிச்சயம் உன் லட்சியம் .
தேடல்உன் முகம் பார்க்க விழைகிறேன் நிழற்படம் எடுத்து பார்க்கிறேன்உன் மாய கண்களும் மந்திர புன்னகையும் ஏதோ செய்யுதடி எனை ...எனது மார்பினருகே வைத்திருக்கிறேன் உன் முகத்தை எப்போதும்.!!!
ஒய்வு திக்கின்றி பயணித்து கொண்டிருக்கிறேன்,பின் தொடர்கிறாய் என்னை நினைவுகளில் ...மனப்புழுக்கம் தாங்க இயலாமல் உன் நினைவுகளின் நிழலில் சற்று இளைபாறுகிறேன்....
நம்பிக்கைநிறைவடையாது என் நிமிடங்கள் நீயின்றி,கடுமையான வார்த்தைகளை நீ பிரயோகிப்பினும் கவலை கொள்ளாமல் இருக்கிறேன்...உன் மீதுள்ள நம்பிக்கையால்.