காத்திருக்கிறேன்
என் வானவில் நீ ..
கலவையான
உன் உணர்வுகளை
என்னிடமே கொட்டுவதால்
என் வானவில் நீ...
என் தேவதை நீ ..
எனக்கான உணர்வுகளை
ஆட்கொண்டு
ஆரவாரிக்கும்
என் தேவதை நீ...
என் அலைகடல் நீ..
பொங்கி எழுந்து
ஆர்ப்பரிக்கும்
உன் வார்த்தை அலைகளில்
என்னை மூழ்கடிக்கும்
என் ஆழ அலைகடல் நீ...
காதலித்து காத்திருக்கிறேன்
உன் வண்ணங்களுக்காக
அது கருமைஎனினும்
அதில் கரைந்து விட..
காதலித்து காத்திருக்கிறேன்
உன் வரங்களுக்காக ..
காத்திருப்பே வரம் எனினும்
என் தேவதைக்கான
இன்னுமோர் தவம் செய ...
காதலித்து காத்திருக்கிறேன்
உன் வார்த்தை பேரலைகளில்
நான் மூழ்கி விட...
காத்திருக்கிறேனடி
உனை காதலித்து !!!!
No comments:
Post a Comment