வா...
அகன்று விரிந்து பரந்த
உன் கண்களில் தெரிகின்றதடி
உன் அவா..
தடுப்பதெது???
தடைகளை உடைத்து வா...
சாதிக்க பிறந்தவள் நீ...
திமிறி எழுந்து வா...
திரைகளை விலக்கி வா...
பீடு நடை போட்டு வா...
எனை வெல்ல யாருமில்லை
என்ற திமிரோடு வா..
அகந்தையோடு வா...
ஆரவாரித்து வா...
இளைப்பாறாமல் இறுமாப்புடன் வா...
ஈன்றுவந்து வா...
உனைவெல்ல யாருமில்லையென வா...
ஊழி பெருவெள்ளமென வா...
எழுச்சியோடு வா...
ஏறுநடை போட்டு வா...
ஐயமின்றி அச்சமின்றி வா...
ஒற்றை தழலுடன் வா...
ஓங்கி எறிய விட்டு வா...
ஒளடதம் பற்றி வா....!!!
இந்த உலகை வென்றுவிட
வா...
உன் காலடியில் இட்டு
மிதித்து விட வா...!!!
வந்து விடு வா...!!!
No comments:
Post a Comment