சிறகடித்து ..
இடைவெளி இல்லாமல்
வந்து விழும் உன்
வார்த்தைகளும் வாக்கியங்களும்
எப்போதும் சலிப்பதேயில்லை
எனக்கு..
நொடிகள் நிமிடங்களாகும்
ஆனால் மணிகள்
நொடிகளாகின்றன
உன்னுடன் கதைத்திருக்கும்போது ...
உன்னுடன் கதைத்தபோது
எஞ்சிய
உன் வார்த்தைகள்
தேவதைகள் ஆகின்றன
நீயில்லாத பொழுதுகளில்...
சின்ன சின்ன சண்டைகள்,
செல்ல கடிகள்,
மூர்க்க முத்தங்கள் ..
வியர்க்கும் பொழுதும்
கை அலம்பிய பிறகும்
துடைத்து விடும் ஆதுரமான
உன் கையுடன் சேர்ந்த
துப்பட்டா...
இப்படி நீயில்லா
தருணங்களிலும்
எனை நிறைத்தபடி நீ...
உன்
முறிந்த சிறகாகவேனும்
எனக்கு அனுமதி கொடு..
உனை பற்றி
நீ பறந்து செல்ல..
அடைய இருக்கும்
சிகரங்களை விட்டு
அலைந்த
நெடும்தரையை சுற்றியே
வருகிறாய்..
சிறிதேனும் பறக்க
முயற்சி செய் உன்
வேலிகளை விலக்கி
நீ அடையபோகும் உயரங்களுக்காக.!!!
No comments:
Post a Comment