Thursday, March 31, 2011

காலம்

உன்னுடன்
கைகோர்த்து
நடந்த நினைவுகள்
இலையுதிர்காலங்களில்...

உன் வெப்பசுவாசமும்

ஆதரவான அணைப்பும்

பனியுதிர்காலங்களில்...


உன் கடுங்கோபமும்

கண்ணீர் தாரைகளும்

மழையுதிர்காலங்களில்...


பருவங்கள் மாறுகின்றன

நினைவுகள்
மாற மாறுகின்றன..

நினைவுதிர் காலம்
தேடுகின்றேன்,
உயிருதிரும்
போதுதான்
என புரிகிறேன்
இப்போது !!!!

No comments:

Post a Comment