Friday, March 25, 2011

என் குட்டி தேவதை பெண்ணே ...

உன்னை பற்றிய நினைவுகளை
மட்டும்
என்னுள் விதைத்து விட்டு
சென்று விட்டாய்..
ஆனால் எனக்கு தெரியாமலே
அவை
விருட்சமாகி விழுதுகள்
விட்டிருக்கின்றது..

எனக்கு மட்டுமே
சொந்தம் என்று உரிமையோ
சொந்தமோ கொண்டாடும் அளவிற்கு
என்னிடம் இதுவரை எதுவுமில்லை
என்றே நினைத்திருந்தேன் ..

ஆனால் இப்போது
ஒன்றிருக்கிறது
என்று உணர்கிறேன் ..

நீ எனக்கு மட்டுமே
சொந்தமானவள் ..
உரிமையானவள்...

காத்து கிடப்பது
உனக்காக மட்டும் என்பதை
மறந்து விடாதே..

நான் தவம் செய
போகின்றேன்..
காத்திருத்தல் எனும் தவம் ..

எதை கொடுக்க போகிறாயடி !!
வரமா !!?
சாபமா !!?
எதை தருபினும் ஏற்று கொள்வேன் ..
வரமெனின்
வாழ்வோம் இணைபிரியாது..
இல்லையெனின்
வாழ்வேன்
உன் நினைவுகளுடன் பிரியாது .!!

No comments:

Post a Comment