காதலிக்கிறேன்
ஆரவாரித்து செல்லும்
பெரும் கூட்டத்தினோடு
சென்றுகொண்டிருக்கிறேன்
தன்னந்தனியாக,
நீயில்லாத பொழுதுகளில்...
தனிமையும் ஆர்ப்பரித்து
பெரும்கூட்டமாகிறது
உன்னுடன் செல்கையில்...
உன்னை காதலிக்கிறேன்
உயிராய் காதலிக்கிறேன்
உன் நினைவுகளை பற்றி
காதலிக்கிறேன்,
உன் காதலை பற்றி
காதலிக்கிறேன்,
எப்போதும் உனை
பற்றி இருக்கவே
இன்னும் இறுக்கமாய்
உன்னை காதலிக்கிறேன்.!!!
No comments:
Post a Comment